பிரான்ஸ் தமிழரிடம் பணம் பறித்த விடுதலைப்புலிகளுக்கு சிறைத்தண்டனை - BBC 

Posted by நிலவன் Monday, November 23, 2009 6:37:27 PM
Rate this Content 1 Votes

பிரான்ஸில் வாழுகின்ற தமிழர் சமூகத்திடம் மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டின் கீழ் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு ஒரு பிரஞ்சு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போருக்காக பல லட்சக் கணக்கான டாலர்களை இந்தக் குழுவினர் பிரான்ஸில் வாழும் தமிழ் மக்களிடம் மிரட்டிப் பறித்ததாக கூறப்படுகிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரான்ஸ் நாட்டுப் பிரிவின் தலைவரான நடராஜா மதிந்திரன் என்பவர் உட்பட 21 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர்.

பாரிஸிலும், அண்மைய பகுதிகளிலும் வாழும், பெரும்பாலும் அரசியல் அகதிகளான தமிழர்களிடம், புரட்சி வரி என்ற பெயரில் இந்தப் பணம் அறவிடபட்டதாக அரச தரப்பு வழக்குத்தொடுனர்கள் தெரிவித்துள்ளனர்.
 

http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_newsbulletin.shtml

Comments are closed on this post.