இன அழிப்பின் பின்னணியில் 

Posted by நிலவன் Thursday, November 19, 2009 4:18:41 PM
Rate this Content 1 Votes

New Directions

"இன அழிப்பின் பின்னணியில்" என்ற தலைப்பில், வெள்ளிக் கிழமை (20/11/2009)  பிரித்தானிய நேரம் இரவு பத்து மணிக்கு சூரியோதயம் (http://firstaudio.net/) வானொலியில் கலந்துரையாடல் இடம் பெறவுள்ளது.
'புதிய திசைகள்' அமைப்பினர் இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்துள்ளனர்.

தமிழ் நாட்டைச் சேர்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற ஈழ ஆதரவுப் போராட்டங்களை இன்றுவரை நிகழ்த்திவரும் அமைப்பின் மாநிலச் செயலாளர் தோழர் மருதையன் இந்தியாவிலிருந்து உரையாடலில் கலந்துகொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கே பதிவு செய்து கொள்ளலாம். கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நீங்கள் இவ்விணையத்தில் பதிவு செய்து கொள்ளாமலே பின்னூட்டங்களையோ கேள்விகளையோ பதிவு செய்து கொள்ள முடியும்.

தமிழில் தட்டச்சு செய்ய: http://www.kuralweb.com/tamil.aspx

பிற்குறிப்பு: கருத்து மற்றும் கேள்விகளை முன்வைத்த அனைவருக்கும் நன்றி.
 
இந்தக் கலந்துரையாடலின் ஒலிவடிவைக் கீழ்க் காணும் இணைப்பில் கேட்கலாம்.

re: இன அழிப்பின் பின்னணியில்

Friday, November 20, 2009 7:24:13 PM மாணவன்
இறுதியாக புலிகளை எதிர்ப்பவர்களெல்லாம் ஈழ மக்களின் நலனுக்கு எதிரானவர்கள் என்ற பிரச்சாரம் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அரசியல் புரிதலற்ற பொதுமக்கள் அதை நம்புகின்றனர். அவர்களுக்கு நீங்கள் செல்ல விரும்புவது...?

re: இன அழிப்பின் பின்னணியில்

Friday, November 20, 2009 7:16:42 PM மாணவன்
என்னுடைய கேள்விகளுக்கு பதிலளித்தமைக்கு நன்றி.. மற்றொரு கேள்வி.. தோழர் மருதையன், இதுவரை இல்லாத வகையில் புலம் பெயர் தமிழர்கள் வீதிக்கு வந்து போராடினர். இன்று போர் முடிந்த போன நிலையில், புலம் பெயர் தமிழர்கள் எப்படி பங்காற்ற முடியும் என்பதை பற்றிய உங்கள் கருத்து.

re:

Friday, November 20, 2009 7:16:11 PM Kannan
நாடு கடந்த அரசு சாத்தியமா?

re: இன அழிப்பின் பின்னணியில்

Friday, November 20, 2009 6:53:35 PM மாணவன்
ராஜீவ் காந்தியின் கொலைக்கு உங்கள் அமைப்பை காரணமாக புலிகள் செய்தியாளர் சொன்னது உண்மையா?

re: இன அழிப்பின் பின்னணியில்

Friday, November 20, 2009 6:40:34 PM மாணவன்
தோழர் மருதையன் சற்று முன்னர் பேசும் முன்னர் இந்தியாவில் தனிநாடு கோரிக்கை எழுந்த போதிலும் தமிழர்களோ, தமிழன் பெயரில் அரசியல் செய்பவர்களோ அதை ஆதரிப்பதில்லை என்றும் கூறினார். அப்படி என்ன பிரச்சனை இந்தியாவில் உள்ளது?

re: இன அழிப்பின் பின்னணியில்

Friday, November 20, 2009 6:35:23 PM மாணவன்
சீனா என்னும் கம்யூனிச நாடு ஏன் இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கியிருக்கிறது, துணை நிற்கிறது. பிற கம்யூனிச நாடுகள் கூட க்யூபா உட்பட ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக நின்றதே?

re: இன அழிப்பின் பின்னணியில்

Friday, November 20, 2009 6:33:05 PM மாணவன்
கருணாநிதி முதல் ஜெகத் கஸ்பர் வரை தமிழனுக்கு எதிரான துரோகிகளின் பட்டியல் அதிகமாவதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்

Friday, November 20, 2009 6:31:56 PM sat
Can tamils ever rise again?

re: இன அழிப்பின் பின்னணியில்

Friday, November 20, 2009 6:18:22 PM nila
இலங்கை நிலவரம் தொடர்ந்து அச்சம் தரும் வகையினதாகவே உள்ளது. அடுத்ததாக சரத்பொன்சேகா அதிகாரத்திற்கு வரும் வாய்ப்புண்டா?

re: இன அழிப்பின் பின்னணியில்

Friday, November 20, 2009 6:12:40 PM Sanujan
எனது சிறிய அறிவுக்கு எட்டிய வகையில் இந்த உலகத்தில் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகள் நிலவியே வந்துள்ளன. பல நாடுகள் அதை தீர்ப்பதில் வெற்றி பெற்று வளர்ச்சியடைந்துள்ளன. இலங்கை இனப்பிரச்சனை ஏன் இழுபறிப்பட்டுக் கொண்டே இருக்கிறது

re: இன அழிப்பின் பின்னணியில்

Friday, November 20, 2009 6:07:18 PM nijasahi
தற்போது இலங்கையில் தமிழருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என ஒருசாரார் கருத்துக் கூறுகின்றனர். தமிழரும் சிங்களவரும் சேர்ந்து வாழ முடியும் என ஐனாதிபதி மகிந்தவில் இருந்து கூறுகின்றனர். இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக தங்கள் கருத்து என்ன?

re: இன அழிப்பின் பின்னணியில்

Friday, November 20, 2009 6:05:01 PM thanam
தலைப்பிற்கு வெளியே கேள்வி கேட்பதற்கு மன்னிக்கவும். தேசிய விடுதலைப் போராட்டம் மார்க்ஸிய சிந்தனைக்கு விரோதமானதா?

re: இன அழிப்பின் பின்னணியில்

Friday, November 20, 2009 6:02:56 PM vadakan aathaam
சர்வாதிகாரிகள் ஆளும் ஆப்பிரிக்க நாடுகளில் பெரும் முதலீடுகளை செய்து அங்குள்ள சர்வாதிகாரிகளையும் காப்பாற்றி அந்த நாட்டு வளங்களையும் சுரண்டும் சீனாவிற்கும் உங்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் என்ன வித்தியாசம்?

re: இன அழிப்பின் பின்னணியில்

Friday, November 20, 2009 5:57:49 PM Vrathan
அமெரிக்க வல்லரசிற்கும் இந்திய பிராந்திய வல்லரசிற்கும் மக்களை ஒடுக்கும் முறையில் நீங்கள் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?

re: இன அழிப்பின் பின்னணியில்

Friday, November 20, 2009 5:54:31 PM pandiyan
ஐயா அப்பாவித்தனமாக கேட்கிறேன். எவ்வளவோ நல்ல மனமும் நல்ல சிந்தனையும் மனிதநேயமும் என எல்லாம் உடைய இடதுசாரிகள் ஏன் புரட்சிக்கு தயாராக முரண்பாடுகளுடன் முட்டி மோதிக் கொண்டிருக்கும் மக்களை வென்றெடுத்து ஒரு புரட்சிகர அரசை அமைக்க முடியவில்லை?

இன அழிப்பின் பின்னணியில்

Friday, November 20, 2009 5:46:27 PM Pandiyan
வணக்கம் ஐயா தேசிய இனப்பிரச்சனைகளில் ஒவ்வொரு இடதுசாரி அறிஞர்களும் மாக்ஸ் லெனின் எங்கெல்ஸ் என இவர்களின் கருத்துக்களை முன்வைத்து வெவ்வேறு விதமான ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களை கூறுகின்றனர். இதுபற்றி தங்கள் கருத்து என்ன?

re: இன அழிப்பின் பின்னணியில்

Friday, November 20, 2009 4:00:31 PM Uthaya
இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

re: இன அழிப்பின் பின்னணியில்

Friday, November 20, 2009 3:57:45 PM VKumar
முத்துக்குமாரின் தியாகம் தொடர்பாக உங்கள் பார்வை/நடவடிக்கைகள் எந்தவகையில் நெடுமாறன் போன்றவர்களிலிருந்து மாறுபடுகிறது?

re: இன அழிப்பின் பின்னணியில்

Friday, November 20, 2009 3:20:07 PM unknown

தமிழகத்தில் இதுவரை புலிகளை வைத்துப் பிழைப்பு நடத்தியவர்கள் தம்மை இனங்காட்டியுள்ளனர். இது எவ்வகையான எதிர்வலைகளைத் தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது?


re: இன அழிப்பின் பின்னணியில்

Friday, November 20, 2009 2:58:08 PM Dark

தமிழ் தேசியப் போராட்டத்தை பல வகைகளிலும் பலவீனமாக்கிய இந்திய பிராந்திய வல்லரசின் நடவடிக்கைகள் இனி எவ்வகையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கெதிராக அமையும்?


Comments are closed on this post.